சென்னை மாநகரில் ஒரு பெரிய பொட்டி தட்டும் அலுவலகத்தில் சிறிய பொட்டி ஒன்றை தட்டிக்கொண்டிருந்தார் தங்கமணி. அப்பொழுது திடிரென்று வலி எடுத்த தங்கமணியை மகப்பேறு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.
அங்கு அழகிய (ரங்கமணி போலவே) ஆண் பிள்ளை பிறந்தது.
குவைத்தில் அக்கவுண்ட்ஸ் வேலையில் இருந்த ரங்கமணிக்கு ஒரே சந்தோஷம். உடன் வேலை பார்க்கும் எல்லோருக்கும் இனிப்புகள் வழங்கினார்.
அப்படி இப்படியென்று மூன்று மாதம் ஓடிவிட்டது.
ரங்கமணியும் தங்கமணியும் தினம் கூகிள்டாக் வழியாக பேசிக்கொண்டனர்.
ரங்கமணி குழந்தையை பார்க்க வேண்டும் என மிக ஆசைப்பட்டார். தங்கமணியிடம் ஓயாது புளம்புவார்.
சரியென்று தங்கமணி புதிதாக வந்துள்ள கூகிளின் வீடீயோ வழி காட்டலாம் என்று முடிவு செய்தார்.
ரங்கமணிக்கு பொட்டி விஷயங்கள் அவ்வளவாக பிடிபடுவதில்லை. கூகிலின் அந்த சேவையை தனது கணினியிலே எப்படி நிறுவது என தெரியவில்லை
தங்கமணி தாமே நிறுவிட ஏதேனும் வழி உள்ளதா என்று கூகிளிலேயே தேடினார்.
அப்பொழுது தான் டீம்வீய்வர் பற்றி தகவல் அறிந்தார்.
அதன் மூலமாக தாமே ரங்கமணியின் கணினியில் கூகிலின் வீடீயோ சேவையை நிறுவ முனைந்தார்.
இந்த சுட்டியினை அழுத்தி மேலே தோன்றும் வலைப்பகுதிக்கு சென்றார். அதில் தரவிறக்கம்(Download) என்ற பகுதியை அழுத்தியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றியது
அதில் (Save) என்ற பித்தானை அழுத்தி வழக்கமாக சேமிக்கும் பகுதியில் தரவிறக்கம் செய்தார்.
பின்னர் அந்த கோப்பை (TeamViewer_Setup.exe) இரண்டுமுறை கிளிக்கியவுடன்
கீழே உள்ளது போல் ஒரு pop-up window தோன்றியது
மேலே உள்ளதில் (Run) என்ற பித்தானை அழுத்தினார்
மேலே இருக்கும் பகுதியில் (Install - Run) இருந்தது.
அதில் (Run) என்பதை அழுத்தி பிறகு (Next)ஐ கிளிக்கினார்
மேலே உள்ள (Agreement)ஐ டிக்கிவிட்டு (Next)அழுத்தினார்
(விஸ்டாவாக இருந்தால் (Unblock)ஐ அழுத்தவும்)
அவ்வளவு தான் நிறுவியாயிற்று.
(இதுவரை சொல்லியது மாதிரி இரண்டு பக்க கணினியிலும் நிறுவ வேண்டும்.)
தனது கணினியில் நிறுவியதுபோலவே ரங்கமணி கணினியிலும் வழிகள் சொல்லி நிறுவினார்
(இனி எப்படி உபயோகிப்பது என்று பார்ப்போம்.)
இரண்டு பக்கங்களிலும் இது போல் ஒரு சாளரம் தோன்றும்.
| Wait for Session | Create Session |
| ID | ID ........................... |
| Password |
ID என்ற இடத்தில் உள்ள 9 இலக்க எண்களையும்
password என்ற இடத்தில் உள்ள 4 இலக்க எண்களையும் ரங்கமணி - தங்கமணியிடம் சொல்ல.
தங்கமணி வலப்பக்கம் ID என்ற இடத்தில் தொடர்ச்சியாக 9 இலக்க எண்ணை இட்டு பின் (Remote Support) என்ற தேர்வை தேர்வு செய்து பிறகு (connect to partner) என்ற பித்தானை அழுத்தினார்கள்
பின் தோன்றும் இந்த சாளரத்தில் 4 இலக்க எண்ணை தட்டச்சு செய்து (Log On) என்ற பித்தானை அழுத்தியவுடன் ரங்கமணியின் கணினி தங்கமணியின் சாளரத்தில் தோன்றியது.
பிறகு தங்கமணி கூகிளின் வீடீயோ சேவையை நிறுவினார்.
அப்புறம் என்ன தினம் தினம் ரங்கமணியும் தங்கமணியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேசிக்கொண்டனர்.
குழந்தையையும் அடிக்கடி ரங்கமணி பார்த்து பரவசப்பட்டுக்கொண்டார்.
---------------------------------------------
கொசுறு: குழந்தை பேர் – ராஜா THE ராஜா
No comments:
Post a Comment