Saturday, November 29, 2008

ஓ இந்திய வரலாறே - 1992 ...

Blind1jpg

 

நாளைக்கு எங்க schoolல கண்ணு தெரியாதவங்களுக்கு ஒரு சிறிய நிகழ்ச்சி வைக்குப்போறோம் ஏதாவது ஒரு கவிதை எழுதி தரியலா அப்படீன்னு என் காதலி(தற்போதைய துணைவி) 1992 கேட்டாங்க.

அதுக்கு முன்னால நாம கவிதை அப்படீன்னு சொல்லி ஒன்னும் சிந்திச்சது இல்லீங்க, சின்ன சின்னதா ஹைக்கூ (நான்தான் சொல்லிக்கனும்) மாதிரி சிலது முயற்சி பன்னியிருக்கேன். ஞாபகம் வந்த பின் பகிர்ந்துகிறேன்.

கவிதை எழுதிதாங்கன்னு அவங்க கேட்டாங்களா, நாமளும் முயற்சி செய்துடுவோம்னு சிந்தித்த போது உதித்தது.

இது கவிதைதானா என்று அல்லத கவுஜையான்னு நீங்களே முடிவு பன்னிக்கோங்கங்கோ

ஓ இந்திய வரலாறே!

ஏன் எங்கள் பெயர்களை உன் பொன் ஏட்டில் பதிக்கவில்லை

அன்று, அந்த கண்ணப்ப நாயனாரோ தன் கண்களை பிறந்த பின் தானே ஈந்தார்

ஆனால் நாங்களோ எங்கள் கண்களை ஈந்துவிட்டு தானே பிறந்தோம்

ஓ இந்திய வரலாறே!

ஏன் எங்கள் பெயர்களை உன் பொன் ஏட்டில் பதிக்கவில்லை

இல்லை இல்லை நீ பொதிந்திருப்பாய்

அதை பார்க்கத்தான் எங்களுக்கு கண்கள் இல்லையே

---------------------------------------------------------

கண் தானம் செய்வோம் ...

 

No comments: