Tuesday, December 9, 2008

தியாக திருநாளுக்கு தாயகம் வந்த ரங்கமணி

attention passengers, the flight will be landing in another 10 minutes, put your belts and please stay in the seat. Welcome to I N D I A. The outside temperature is …

அதிகாலை 7 மணியளவில் சென்னை வந்து சேர்ந்தார் ரங்கமணி.

அதிகம் லக்கேஜ் இல்லாததால் அடுத்த 26 நிமிடங்களில் விமான நிலையம் விட்டு வெளியேறினார்.

வானம் இன்னும் வெண்மை படறாமல் இருந்தது. மழை தூறல் நின்றுவிட்டிருந்தாலும் சிறு சாரல் வீசிக்கொண்டிருந்தது. அதில் நினைவதே ஒரு சுகம் என சிறுது நேரம் நின்றிருந்தார்.

மணி 7:50 ஆகிவிட்டிருந்தது இன்னும் 1 மணி 45 நிமிடங்களில் கோவை செல்லும் உள்நாட்டு விமானத்தில் செல்லவேண்டியுள்ளது.

விமான நிலையத்திலேயே இருக்கும் அடையாறு ஆனந்த பவனில் தங்கமணிக்கு பிடித்த மில்க் சுவீட்டும், தாய் வீட்டில் தங்கமணி இருப்பதால் மாமியாருக்கு பிடித்த தேங்காய் போலியும் வாங்கிக்கொண்டார். குழந்தையையும் தங்மணியையும் பார்க்க போறோம் என்ற சந்தோஷம் அவர் நினைவுகளை ஆட்க்கொண்டிருந்தது.

செய்தி என்னன்னா தியாக திருநாளை முன்னிட்டு குவைத்தில் 7 முதல் 12 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு 5 நாட்கள் விடுப்பு எடுத்துகொண்டு … இருங்க இருங்க ஏதோ அறிவிப்பு …

கடைசி அழைப்பு கோவை செல்லும் விமானம் இன்னும் சற்று நேரத்தில் புறப்படவுள்ளது பயனிகள் அனைவரும் …

“நேரமாகிவிட்டது நான் சீக்கிரம் போய் ஏறிக்கிறேன்.”

கோவை விமான நிலையம் விட்டு வெளியேறி தங்கமணியின் வீடு வந்து சேருகையில் 12 மணி ஆகிவிட்டது. கோவையில் எப்பொழுது போல் சூரியன் சுட்டு …

வீடு வந்திடுச்சி, இருங்க.

ஏனுங்க மாப்பிள்ளை பிரயானம் சுகமாயிருந்ததா ?

அம்ணி…(உள்ளேயிருக்கும் தங்கமணியை அழைத்தார்) , வாங்க வாங்க.

ராஜா … ராஜா பாருப்பா அப்பா வந்திருக்கார்.

ராஜா, ராஜா, பரவசத்தில் ஒரு கண்ணுக்கு அழுதே விட்டார் ரங்கமணி.

அப்புறமென்ன வழக்கமான விசாரிப்புகளும் பேச்சுகளுமாய் நேரம் கறைந்தது.

குளிச்சிட்டு வந்திடறேன்.

வந்த பின் உணவருந்திவிட்டு தன் பெற்றோறை பார்த்துவிட்டு சாயங்காலமே குழந்தை பார்க்கவென்று வந்துவிட்டார்.

இப்படியாக குழந்தையுடனே இரண்டு நாட்கள் கறைந்தது.

9ஆம் தேதி.

 

குழந்தை மற்றும் நாங்கள் இருவரும் கோவில் சென்றுவிட்டு வந்தோம்.

 

இன்று தியாக திருநாள். இஸ்லாமிய நண்பர்களுக்கு வாழ்த்து சொல்லவேண்டி …

ஹலோ தமிழ் பிரியர் வீடு தானுங்களே

அத்தா… யாரோ போன்ல தமி…

இல்லீங்க அம்மணி ஜின்னா பாய் வீடுதானுங்களே.

ஆமாங்க … நீங்க,

அவர் நண்பருங்க. ரங்கமணின்னு சொல்லுங்க தமிழ் பிரி… சகோதரர் ஜின்னாவுக்கு தெரியும்.

அப்படியா …

தியாக திருநாள் வாழ்த்துக்கள் சொல்ல தான் …

ரொம்ப நன்றிங்க.

சரிங்க குழந்தைகளுக்கும் வீட்டில் உள்ள எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்களை சொல்லவும்.

சரிங்க.

ஹலோ அப்துல்லாஹ் …

இருங்க கூப்பிடறேன், ஏங்க உங்களுக்கு தான்.

ஹலோ யாரு …

அப்துல்லாஹ் நாந்தான் குவைத் ரங்கமணி.

ரங்கமணியா … எப்போ வந்தீங்க வீட்ல குழந்தை மற்றும் தங்மணி சுகமா.

ம்ம்ம் … நலம் தியாக திருநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்க்கும்.

மிக்க நன்றீங்க, ஊருக்கு வந்தா வீட்டுக்கு வாங்க

அடுத்த முறை முயற்சிக்கிறேன். 10 நாட்கள் விடுப்புல தான் வந்தேன்.

ஓ! அப்படியா. ஒக்கே பார்க்கலாம்.

ஏனுங்க …

ஏனுங்க அம்ணி …

தமிழ் தோழிக்கு வாழ்த்து சொல்லனும்.

சொல்லுங்க அம்ணி …

ஹலோ தமிழ்த்தோழி …

 

அப்புறம் …

நண்பர்களே. தியாகத்திருநாளை கொண்டாடும் அனைவருக்கும் ரங்கமணி தங்கமணி சார்பில் வாழ்த்துக்கள்.

எங்க வீட்டு ராஜாவுக்காகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

வேலை நிறைய இருக்கு அடுத்த வாரம் பார்க்கலாம்.

 

Eid1

No comments: