Friday, December 12, 2008

இப்படிக்கு iMate 9502

உன் குரல் கேட்க
கையிலேயே வைத்திருப்பான்
இப்பொழுது அவன் பையில் கூட வைப்பதில்லை

அமுதுக்கு நட்பானதால் நீ
என் ஆங்கில குறுந்தகவலுக்கு பதில் அனுப்ப வில்லையா

நீ பேசும் பேச்சை கேட்டு
அவன் காது மடல் சூடாவதை விட
என் உடல் சூடாவதே அதிகம்

மழை காலம் ஆதலால் ரொம்ப குளிருது
என் உடல் சூடாக்க வேண்டும்
அழைத்துவிடு என் எண்னை


--- இப்படிக்கு iMate 9502

No comments: