Monday, December 15, 2008

மந்திரிக்கு கிடைத்த ஆப்பு

1970

அந்த பெரிய அலுவலகத்தின் வாயில் திறப்பதற்காக ஊழியர்கள் திரலாக காத்திருந்தோம்.

அவ்வூழியர்களின் மேலாளராக நம்மமந்திரிஅவரை அப்படித்தான் நாங்கள் அழைப்பது வழக்கம்.

மந்திரிவாயில் பெரிய சுருட்டு ஒன்று புகைந்து கொண்டிருந்தது, பாதிக்குமேல் புகைந்துவிட்ட சுருட்டின் சாம்பல் நீண்டு கொண்டிருந்தது. நம்மமந்திரியார் அதை மிக ஸ்டைலாக தட்டிவிட்டார். அந்த சாம்பல் ஒரு நீள உருண்டையாக அந்த சாலையிலே உருண்டு ஓடியது.

அதுவரை எதிரில் இருக்கும் பேரூந்து நிலையத்தில் நின்று கவணித்து கொண்டிருந்த ஒருவர் எங்கள் அருகில் வந்தார்

நேராகமந்திரியிடம் சென்றார்.

தங்கள் அடையாள அட்டையை தர இயலுமாஎன்றார்.

வெலவெலத்து போனமந்திரி” - “எதுக்கு கேட்குறீங்க - நீங்க யார்என்று வினவினார்

அதற்கு அவர் தனது அடையாள அட்டையை காண்பித்தார். நாங்கள் எல்லோரும் நடுங்கிவிட்டோம்.

அவர் ஒரு C.I.D.

பின்னர் அங்கேயே அந்த ஊர் நாணயத்தில் 20 அபராதம் விதித்தார்.

மேற் சொன்ன விபரம் நடந்தது 1970ல், நேற்று என்னுடைய அயல்நாட்டு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

அவர்கள் வசிக்கும் ஊரில் குப்பையை பொது இடங்களில் தவறாக போட்ட சுமார் 22 பேர் தண்டனைக்கு உள்ளானர். தண்டனை என்ன தெரியுமா...

பொது இடங்களில் சென்று குப்பைகளை சுத்தம் செய்ய வேண்டும், அதை புகைப்படம் பிடித்து அடுத்த நாள் தினசரியில் வரும்.

இதை கூறிவிட்டு மேற் சொன்னமந்திரிசம்பவத்தை சொன்னார்.

சட்டம் என்பது கடுமையாக இருக்க வேண்டும், அதன் செயல்படுத்துவதே கடமையாக இருக்க வேண்டும்.

நேற்று பத்திரிக்கையில் ஒரு செய்தி பார்த்தேன்.

ஆந்திர மாநிலத்தில் பெண்ணின் மீது அமிலம் ஊற்றுவிட்டான் ஒரு (காதலன் என்று சொல்லி கொல்லும்) கயவன்.

காதல் என்றால் என்னவென்று வரையருத்து கூறிவிட முடியாது, பலரும் பல உவமாணங்களும் அர்த்தங்களும் தரலாம்.

என்னை பொறுத்தவரை காதல் என்பது அளவிலா அன்பு செலுத்துதல்.

நாம் காதலிக்கும் ஒருவர் நம்மையே கைபிடிக்கவேண்டும் என்று நினைப்பது கூடாது. நாம் காதலிக்கும் ஒருவர் நலமாகவும் சந்தோஷமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பதே காதல். வேறு ஒருவரோடு வாழ்ந்தால் தான் நலமாக இருக்க முடியும் என்று நாம் காதலிக்கும் ஒருவர் நினைத்தால் அதற்கு உதவி செய்வது குறைந்த பட்சம் உபத்திரம் இல்லாமல் இருக்க வேண்டும்.


அந்த செய்தியை படித்தவுடன் எனக்குள் தோன்றியது - ஆஹா எழதவதற்கு ஒரு செய்தி கிடைத்தது ...

ச்சே என்ன கேவலமான எண்ணம்.

இதே நிலைதாங்க நம்ம ஊடகங்கள் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நிகழ்வும் ஒரு செய்தியே.

அநேக மக்கள் நிகழ்வுகளை மட்டுமே பேசுகிறார்கள் - தீவரவாதத்தை பற்றி - தீவிரமாக வாதம் செய்கின்றனர்.

(என்னையும் சேர்த்து) இதற்கு ஒரு சரியான தீர்வினை பறிந்துறை செய்ய தெரியவில்லை.

Linux, Unix, Solaris இவற்றை virusகள் எலிதாக தாக்கிவிடுவதில்லை Windows மட்டுமே virus, spam ware, mal ware, worms இப்படி பல விதமான தாக்குதல்களுக்கு உள்ளாகின்றது.

அதன் கட்டமைப்பு அப்படி இருக்கின்றது.

அதுபோலவே நமது நாட்டிலும் அதிகமான loop holes இருக்கு. அவற்றை இனம்கண்டு அடைக்க வேண்டும்.

உள்ளேயிருக்கும் நச்சுகளை முதலில் நசுக்க வேண்டும் ... ம்ம்ம் ... நிச்சியம் நடக்கும்.

ம்ம்ம் ... புலம்பிட்டேன் ... புலம்ப வைத்த சந்தனமுல்லைக்கு மிக்க நன்றிகள்

மனித நேயம் செத்து கொண்டு வருகிறது என்றாலும் இன்னும் கொஞ்சம் இருக்கின்றது ...

வெளிய அடை மழை பேரூந்தில் ஜன்னல்கள் மூடப்பட்டுள்ளன, விளக்குகள் போடப்பட்டுள்ளன

அங்கே அழகான ஒரு பெண் தன் கைகுழந்தையுடன் பயனம் செய்கிறாள் அருகே அவள் கணவன்.

பேரூந்தில் பல கணவான்களின் கண்கள் அப்பெண்னையே மொய்த்த வன்னம் ...

அக்குழந்தை அழ தொடங்கிவிட்டது எவ்வளவோ சமாதானம் செய்தும் முயற்சிகள் தோல்வியே.

கணவனின் காதில் மனைவி சொல்கிறாள் குழந்தைக்கு பாலூட்ட வேண்டும் என்று.

கணவனோ இந்த கயவர்களின் பார்வை ஏற்கனவே இங்கு தான் இருக்கிறது என்பதால் மறுக்கிறான்.

நேரம் செல்ல செல்ல குழந்தையின் அழுகை அதிகமாகிறது.

வேறு வழியில்லாமல் அந்த தாய் தன் மாராப்பை விளக்கி தன் குழந்தையை பாலுன்ன வைக்கிறாள்.

தலையை தொங்க விட்டிருந்த கணவன் மெல்ல தலை நிமிர்ந்து கூட்டத்தை பார்க்கிறான்,

அங்கே அனைத்து கண்களும் வேறு பக்கம் திரும்பியிருந்தன ...

தாய்மை என்பதின் தூய்மையை பருகியவர்கள் தானே அனைவரும் ...


No comments: