ஒற்றை பெயருடன் அறிமுகமானாய் ...
பெற்றோர் வைத்த உனது பெயருடன் அறிமுகமானாய்
பின்னர் college mate என்று அடைமொழி பெற்றாய்
ஒற்றை பெயருடன் அறிமுகமானாய் ...
பெற்றோர் வைத்த உனது பெயருடன் அறிமுகமானாய்
பின்னர் ஓர் நாள் room mate என்று அடைமொழி பெற்றாய்
எப்பொழுதும் போல் காலச்சக்கரம் மிக வேகமாய் உருண்டது
பிழைப்புக்காக தேசம் மாறினோம்
நேசங்களும் பல மாறின
பின்னர் ஓர் நாள்
நல்லோர் இட்டு வைத்த பூ ஒன்று பூத்தது
ஆம் நமக்குள் நட்பு எனும் பூ பூத்தது
ஒற்றை பெயருடன் அறிமுகமானேன் ...
பெற்றோர் வைத்த எனது பெயருடன் அறிமுகமானேன்
பின்னர் ஓர் நாள் நண்பன் என்று அடைமொழி அளித்தாய்
நண்பா என்ற பெயரில் எனை அழைத்தாய்.
கல்லூரி நாட்களில் உனது அருகில் இடம் தராத நீ
உன் இதயத்தின் ஒரத்தில் அல்ல உயரத்தில்
எனக்கென ஓர் சிம்மசனம் அமைத்தாய்
வாப்பா என்றழைக்க எனக்கு ஓர் பாப்பா இதுவரை இல்லையென்றாலும்
மாமா என்றழைத்து உனது மகள் எனது உணர்வுக்கு ஓர் உயிர் தந்தது
இல்லை இல்லை எனது உயிருக்கே ஓர் உணர்வு தந்தது
அன்பே,ஆருயிரே என்றுன்னை அழைக்கும் உன் துனைவி
காக்கா என்றென்னை அழைப்பதில் அன்பும் உயிரும் இருந்தது
நண்பா இன்னும் இன்னும் இருக்கு சொல்ல
நானும் சொல்வேன் மெல்ல மெல்ல ...
-------------------------------------------------------------------------
வாப்பா - தந்தை / காக்கா - அண்ணன்
No comments:
Post a Comment