அத்தியாயம்: 78
அந்நபா - அந்தச் செய்தி
மொத்த வசனங்கள்: 40
இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது. ***********************************************************************
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
78:1 எதைப்பற்றி அவர்கள் ஒருவருக்கொருவர் கேட்டுக்கொள்கின்றனர்?
78:2 மகத்தான அச்செய்தியைப் பற்றி,
78:3 எதைப்பற்றி அவர்கள் வேறுபட்(ட கருத்துக்கள் கொண்)டிருக்கிறார்களோ அதைப் பற்றி,
78:4 அவ்வாறன்று! அவர்கள் விரைவில் அறிந்துகொள்வார்கள்.
78:5 பின்னரும் (சந்தேகமின்றி) அவர்கள் விரைவிலேயே அறிந்துகொள்வார்கள்.
78:6 நாம் இப்பூமியை விரிப்பாக ஆக்கவில்லையா?
78:7 இன்னும், மலைகளை முளைகளாக ஆக்கவில்லையா?
78:8 இன்னும் உங்களை ஜோடி ஜோடியாகப் படைத்தோம்.
78:9 மேலும், உங்களுடைய தூக்கத்தை இளைப்பாறுதலாக ஆக்கினோம்.
78:10 அன்றியும், இரவை உங்களுக்கு ஆடையாக ஆக்கினோம்.
78:11 மேலும், பகலை உங்கள் வாழ்க்கை (வசதிகளைத் தேடிக்கொள்ளும் காலம்) ஆக்கினோம்.
தொடர்க ...
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment